நிர்வாணமாக நடிக்கவும் நான் தயார் பாலிவுட்டை பரபரப்பாக்கிக் கொண்டிருப்பவர்தான் ரஸியா. தெற்கிலும் தற்போது நுழைந்து கொண்டிருக்கிறார். கோவா பட விழாவுக்கு வந்திருந்த ரஸியா, எப்படி வேண்டுமானாலும் நடிக்க நான் தயார். அவ்வளவு ஏன், நிர்வாணமாக நடிக்கவும் நான் தயார் என்றார் படு தில்லாக.
சூப்பர் மாடலாக இருந்து திரைக்கு வந்தவர் ரஸியா. ஏராளமான இந்திய விளம்பரங்கள் மற்றும் பல்வேறு சர்வதேச விளம்பரங்களில் தலை, உடல் காட்டியவர்.
அதுமட்டுமல்லாமல் அட்டகாசமான டான்ஸரும் கூட. மேடை நாடகங்களில் பின்னி எடுத்து விடுவார். இவரது நடன நிகழ்ச்சிகள், வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பிரபலாமாம். அந்த அளவுக்கு சூப்பர் ஹிட் டான்ஸர் ரஸியா.
கோவாவில் ரிலாக்ஸ்டாக காணப்பட்ட ரஸியாவிடம் பேச்சு கொடுத்தபோது, சூடான காட்சிகளில் நடிக்க எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. முத்தக் காட்சிகளுக்கு என்னிடம் பெரமிஷன் கேட்கத் தேவையே இல்லை.
அதேபோல அரை நிர்வாணமோ அல்லது முழு நிர்வாணமோ, கதைக்குத் தேவைப்பட்டால் நடிக்கவும் நான் தயார்தான்.
நான் ஒரு நடிகை, என்னை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்வது இயக்குநர்தான். கதைக்குத் தேவை என்று என்னிடம் கூறினால் எப்படியும் நடிக்க நான் ரெடி.
தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த பர்ப்பிள் பயர் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் கிராஸ் ஓவர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் ரஸியா.
இப்படத்தில் கலக்கலான பிகினி உடையில் வருகிறாராம் ரஸியா. அதுமட்டுமல்லாமல் படு சூடான படுக்கை அறைக் காட்சிகளும் படத்தில் இருக்கிறதாம். இந்தக் காட்சிகளை மிகுந்த ரசனையுடன் படமாக்கவுள்ளனராம். பார்த்தால் ஆபாசமாக இருக்காது என்கிறார்கள். படம் முழுக்க அமெரிக்காவின் அழகிய கடற்கரைகளில்தான் வளரவுள்ளதாம்.
பீச் காட்சிகளை வைத்து விட்டு ரஸியாவை சும்மா விட்டு விட முடியுமா. இதனால்தான் படம் முழுக்க கவர்ச்சியை அள்ளி இறைத்துள்ளார்களாம்.
இப்பவே கண்ணைக் கட்டுதே..