இந்தியாவில் முக அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் இணைய தளம் வெளிநாட்டு ஹேக்கர்களால் கடந்த புதன்கிழமை தாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கிட்டத்தட்ட 2.7 மில்லியன் ஆன்லைன் பேங்க் வாடிக்கையாளர்களையும், 2.5 மில்லியன் வங்கி வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ள ஸ்டேட் பேங் ஆப் இந்தியா- வங்கியின் இணைய தளம் கடந்த வாரம் புதன் கிழமை தாக்கப்பட்டுள்ளது. அது தாக்கப்பட்ட நேரத்தில் வழக்கத்தை விட அதிகமாக ட்ராப்பிக் இருந்துள்ளதாக வங்கியினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது.
கடந்த வாரம் புதன்கிழமை அன்று தன்னுடைய முதன்மை இணைய தளம் www.sbi.co.in. துவக்கினால் வெப்சைட் ‘service unavailable’ ‘our site is under maintenance’ என்ற தகவலே வந்துள்ளது . அதே நேரத்தில் எங்களதுடைய வெப்சைட் அன்று அதிகப்படியான ட்ராபிக்கிலும் இருந்துள்ளது.
இது குறித்து நாங்கள் ரிசர்வ் வங்கி மற்றும் மும்பை சைபர் செல் ஆகியவற்றிற்கு தகவல் தெரிவித்திருக்கிறோம் என்றார்.
அதோடு இதுவரை வங்கியின் தகவல்கள் , வாடிக்கையாளர்களின் கணக்கு வழக்குகள் சரிவர இருப்பதாகவும் , வாடிக்கையாளர்கள் இது குறித்து பயப்பட தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
பிரபல ஆன்டிவைரஸ் நிறுவனமான சிமாண்டெக் இந்திய வங்கிகளின் இணைய தளங்களுக்கு 2007ம் இரண்டாம் காலிறுதியில் ஒரு வினாடிக்கு 400 ப்ஷ்ஷிங் தாக்குதல் நடைபெற்றதாக தெரிவித்துள்ளது.