கனடாவில் உள்ள டொராண்டோவை சேர்ந்தவர் லெ டிரங். இவர் ஒரு ரோபோட்டை உருவாக்கி இருக்கிறார். இதற்கு அய்கோ என்று பெயர் வைத்து இருக்கிறார். இது பெண் ரோபோட் ஆகும்.
இது ஆங்கிலம், ஜப்பானிய மொழி ஆகியவை பேசும். எலக்ட்ரானிக் பொருள்கள், வயர்களால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோட்டின் முகம், தலை ஆகியவை மனித முகத்தையும், தலையையும் போல இருக்கிறது. தொடு உணர்வுகளை உணரக்கூடியது.

இதனால் அன்பையும், கோபத்தையும் காட்டினால் இயல்பான முறையில் பிரதிபலிக்கக்கூடியது. செக்ஸ் உறவுக்கும் இது ஏற்றதாக இருக்கும்.
அய்க்கோவை ஒரு மனித பெண்ணை போல தான் உருவாக்கி இருக்கிறேன். எதிர்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இப்படி ஒரு ரோபோட் இருக்கும் என்று நம்புகிறேன் என்று லெ ட்ரங் சொல்கிறார்.