சில மாதங்களுக்கு முன் ஆங்கில இணையத்தளங்களில் 5- புகைப்படங்கள் பெரும்பரபரபப்பாக பேசப்பட்டன. ஒரு புகைப்படத்தில் 50- க்கும் மேற்பட்ட பிணங்கள். அத்தனையும் ஆண்களின் நிர்வாண உடல்கள். வெள்ளை நிறத்தவர்கள். தரையிலும், ஏதோ ஓர் குளியல்தொட்டியிலும் குப்பைகள் போல் கொட்டப்பட்டிருக்கின்றது உடல்கள்.
அடுத்த புகைப்படத்தில் நிர்வாண உடல்களை கூறுபோட்டு, உறுப்புகள் பிரிக்கப்பட்டு கண்ணாடி பாட்டில்கள் அடைக்கப்படுகிறது. பிணத்தை அறுப்பவர்கள் கைகளில் மரங்களை வெட்டும் கருவிகள்.
அடுத்த புகைப்படமோ மனிதர்களின் வெட்டியெடுக்கப்பட்ட சதைகளை பாய்க்கெட் செய்து எடைபோடப்படுகிறது. அங்கே இரு பெண்கள் உட்கார்ந்தபடி சதைத்துண்டுகளை எடைபோடக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த புகைப்படங்கள் குறித்து போதிய உண்மைகள் இன்னும் வெளிவரவில்லை. அக்கொடுர புகைப்படங்கள் ரஷ்யாவில் எடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவை பிணஅறையில்
பரிசோதனைக்காக வைக்கப்பட்ட உடல்கள் என்றார்கள். அவை ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.
கீழே கிடந்த ஒர் ஆண் பிணத்தின் கைகள் கட்டப்பட்டிருக்கிறது. பிணஅறையில் இப்படி பிணங்களை மானவாரியாக கொட்டி வைப்பது இல்லை.
ஆனால், இன்னொரு குற்றச்சாட்டு ரஷ்யா மீது சொல்லப்படுகிறது. சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்பட்ட போது, இறந்த மனிதர்களின் சதைகளை சாப்பிட ஆரம்பித்ததாகவும், அதற்கான தயாரிப்பில் ஈடுபட்ட கூட்டத்தைத் தான் திருட்டுத்தனமாக புகைப்படம் எடுத்து இணையத்தில் அம்பலப்படுத்தியதாகவும் சொல்லப்பட்டது.
எதுவாக இருப்பினும் ஊகத்தை வைத்து ஏதோ பேசிக் கொண்டிருக்கிறோம். ஊகமாக கிடந்தாலும் படங்கள் நம்மை அதிர வைத்துவிடுகின்றன. ஈழத்தில் இருக்கும் மர்மங்கள் போல் இதுவும் ஒன்று. உலகில் இன்னும் என்னென்ன நடந்துக் கொண்டிருக்கின்றதோ?
அதிர்ச்சிகரமான காட்சிகள்; இன்னும் நாம் மனிதர்களாகவில்லையா?