மும்பையில் கடந்த மாதம் நுழைந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் வக்கிர உணர்வுடன் வெளிநாட்டுப் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கொடூரமான காட்சிகளை தாங்கிய புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
மும்பையில் கடந்த மாதம் 26ம் தேதி நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாஜ் மற்றும் டிரைடண்ட் ஓட்டல்களுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை கொன்றனர். இந்தத் தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து கமாண்டோ படையினர் 9 பயங்கரவாதிகளை கொன்றனர். கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான். அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தாஜ் ஓட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண்களை பயங்கரவாதிகள் நிர்வாணப்படுத்தி அவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
தாக்குதலுக்குப் பிறகு போலீசார் நடத்திய சோதனையில் வெளிநாட்டுப் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை தடயவியல் போலீசார் கண்டெடுத்துள்ளனர்.
தாஜ் ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளன என்ற போதிலும் கற்பழிக்கப்பட்ட காட்சிகள் எதுவும் இல்லை என்று போலீஸ் வட்டாரங்கள் கூறியுள்ள