இந்த வார தலை உருளல், நமீதா! த்ரிஷா, நயன்தாராவை தொடர்ந்து நெட்டுக்குள் சிக்கி நித்திரையை கெடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் கேரவேனில் உடைமாற்றிக் கொண்டிருக்கும் போது திருட்டுத்தனமாக ஷ§ட் பண்ணப்பட்டதாகவும், அது நெட்டில் உலவி வருவதாகவும் செய்திகள் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்திருக்கின்றன. நாமும் விரல் தேய நெட்டுக்குள் முட்டி மோதி பார்த்தாலும் ஒரு இடத்திலாவது தென்பட வேண்டுமே? எல்லாம் வெறும் செய்திகள்தான். டிரஸ் மாற்றும் க்ளிப்பிங்ஸ் இல்லவே இல்லை.
ஒரு வேளை நமீதா பார்த்திருப்பாரோ? அவர் வெளியூரில் இருப்பதால், நமது கேள்விகளுக்கு விளக்கம் அளித்தது அவரது உதவியாளர்கள்தான். “அப்படி ஒரு வீடியோ க்ளிப்பிங்ஸ் வெளிவருவதற்கு வாய்ப்பே இல்லை. சாதாரணமாகவே ஜாக்கிரதை உணர்வு அதிகம் உள்ளவர் நமீதா. ஸ்டுடியோக்களில் தரப்படும் ரூம்களுக்கு போனால் கூட, கவனமாக எல்லாவற்றையும் செக் பண்ணுகிற பழக்கம் உள்ளவர். மேக்கப் ரூமில் இருக்கிற குப்பை கூடையை கூட கிளறி பார்த்துவிட்டுதான் அமர்வார்”.
“அவராவது கேரவேனுக்குள் செக் பண்ணாமல் ஏறுவதாவது? இந்த மாதிரி சிக்கி கொண்டு சீரழிய வேறு ஆளை பாருங்கள்” என்கிறார்கள் அதிரி புதிரியாக! த்ரிஷா மேட்டரிலிருந்தே ரொம்ப கவனமாகதான் இருக்காங்க போலிருக்கு எல்லாரும்!